’எலிசபெத் ராணியை கொலை செய்வேன்’ – பரபரப்பு வீடியோ

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்வேன் என வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 102 ஆண்டுகள்…

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்வேன் என வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 102 ஆண்டுகள் கழிந்துள்ளன. இந்த படுகொலைக்கு பழிக்குப்பழியாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முகமூடி அணிந்துகொண்டு பேசும் அவர், தனது பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்றும், தான் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சீக்கியர் என்றும் கூறியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2-ம் எலிசபெத் ராணி தங்கியிருந்த வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதத்துடன் ஊடுருவிய 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகி உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.