தம்பிக்கு எனது வாழ்வையே தருவேன்; பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி தம்பிக்காக என் வாழ்வையே தருவேன் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்…

பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி தம்பிக்காக என் வாழ்வையே தருவேன் என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் சூடுபிடுத்துள்ளது. இந்த மாநிலத்தின் வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நடைபெறுகிறது. பரப்புரையில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் போக்கு நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவிற்கும், ராகுலுக்கும் இடையே உள்ள மோதல் போக்குதான் காங்கிரஸை வீழ்ச்சியடைச் செய்துவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இன்று பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “எனது தம்பிக்காக எனது வாழ்வையே தருவேன். எனக்காக அவரும் தன் வாழ்வையே தருவார். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “யோகி ஆதித்யநாத்திற்கும், பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்” என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.