மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன்- பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட்  ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புவதாக மும்பையில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். நாடு முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு…

மத்திய பட்ஜெட்  ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புவதாக மும்பையில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தலைநகர் டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கபட்டது.

இந்நிலையில் புதிதாக 2 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில்கள் மகாராஷ்டிரா மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது. அதாவது மாநில தலைநகர் மும்பையில் இருந்து ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இரு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படஉள்ளது.

மும்பையிலிருந்து சோலாபூர் மற்றும் சாய்நகர் ஷீரடிக்கு இயக்கப்படும் இரண்டு வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மும்பையில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் சமய சுற்றுலாவை மேம்படுத்தும். இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 2 வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தரயில்கள் வணிக நகரங்களான மும்பை, புனேயை இணைக்கின்றன.

கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், தொழிலதிபர்கள், பக்தர்கள், விவசாயிகளுக்கு இந்த ரயில் மிகுந்த பயனளிக்கும். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, பொதுப் போக்குவரத்து முறையை விரைவாக நவீனமயமாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன். எல்லோரும் வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.