அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட அமெரிக்க நடிகர் லியோனார்டா டிகாப்ரியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் காண்டாமிருங்கள் கொல்லப்படுவதற்கு எதிரான அசாம் மாநில அரசின் நடவடிக்கைகளை அவர் பாராட்டியிருந்தார்.
இதையும் படிக்கவும்: மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்தையும் பலப்படுத்தும் என நம்புகிறேன்- பிரதமர் மோடி
இந்நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட அமெரிக்க நடிகர் லியோனார்டா டிகாப்ரியோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், வனவிலங்குகளைப் பாதுகாப்பது நமது கலாச்சார அடையாளமாகும். எங்கள் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க விடாமுயற்சி செய்கிறோம். உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/himantabiswa/status/1623771156456304642
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “கடந்த 2000 முதல் 2021-ம் ஆண்டு வரை சுமார் 190 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அசாம் மாநில அரசு கசிரங்கா தேசியப் பூங்காவில், அழிந்து வரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடந்த 1977ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த பகுதியில் முதல் முறையாக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், காசிரங்கா தேசியப் பூங்காவில் 2,200 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். இந்தியாவின் இந்த வெற்றி பல நல்ல செய்திகளை கொண்டு வருகிறது. ஏனெனில் அரிய காண்டாமிருகத்தின் உலக மக்கள் தொகை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 200 இல் இருந்து சுமார் 3,700 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.







