ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையுமென நம்புகிறேன் -சசிகுமார்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன் என இயக்குநரும் நடிகருமான சசிகுமார் ராமநாதபுரத்தில் பேட்டியில் தெரிவித்தார். நேற்று வெளியான காரி திரைப்படம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில்,…

ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன் என இயக்குநரும் நடிகருமான சசிகுமார் ராமநாதபுரத்தில் பேட்டியில் தெரிவித்தார்.

நேற்று வெளியான காரி திரைப்படம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், காரி திரைப்படத்தை ரசிகர்களோடு இணைந்து ராமநாதபுரம் ரமேஷ் திரையரங்கில் இயக்குனரும் காரி திரைப்படத்தின் நடிகருமான சசிகுமார் படம் பார்த்தார்.

திரைப்பட இயக்குநரும் காரி திரைப்படத்தின் நடிகர் ஆன சசிகுமார் ராமநாதபுரம் திரையரங்கில் ரசிகர்களோடு இணைந்து படம் பார்த்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தைப் பயன்படுத்தி உயிரோட்டமான கதை களம் நிறைந்த பகுதிகளில் காரி திரைப்படம் எடுக்கப்பட்டது பொதுமக்கள் திரைப்படம் எடுப்பதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் மாவட்டமாக ராமநாதபுரம் இருந்து வருகிறது என்றார்.

மேலும், பாரம்பரியம் மறக்காமல் மாவட்ட முழுவதும் சிலம்பு தப்பாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் போன்ற கிராமிய கலைகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகிறது மிகவும் பெருமையாக உள்ளது ஜல்லிக்கட்டு தீர்ப்பு விரைவில் வர உள்ளது அது தமிழக மக்களுக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறேன் என்றார்.

அத்துடன், இயக்குநர் பிடித்துள்ளதா நடிகர் பிடித்துள்ளதா என்று கேட்டால் இரண்டுமே எனக்கு மிக மிகப் பிடித்துள்ளது. மிக நேர்த்தியாகச் செய்து வருகிறேன். விரைவில் இன்னும் மூன்று திரைப்படங்கள் புதியதாகத் திரைக்கு வர உள்ளது எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.