முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா Instagram News

நான் எங்கேயும் காணாமல் போகவில்லை, இங்கேயே தான் இருக்கிறேன்-நடிகை இலியானா ஓப்பன் டாக்!

திரையுலகில் இருந்து சில காலமாக இலியானா ஒதுங்கியிருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், நான் எங்கேயும் காணாமல் போகவில்லை, இங்கேயேதான் இருக்கிறேன் என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கேடி படத்தில் அறிமுகமானவர் நடிகை இலியானா. தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், 2012ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இலியானாவும் ஒருவர். போட்டோஷுட் புகைப்படங்கள், பிகினி உடை புகைப்படங்களைப் பகிர்ந்து தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனுடன் இலியானா டேட்டிங்கில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சில காலமாக படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவர் கடைசியாக அபிஷேக் பச்சனின் தி பிக் புல் (2021) படத்தில் நடித்தார். இருப்பினும், விடுமுறை நாட்கள் மற்றும் படப்பிடிப்புகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிலவற்றை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தார். 

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நேர்காணலில் இலியானா சில காலமாகவே திரையுலகில் இருந்து காணாமல் போனது குறித்து கேட்டபோது, நான் காணாமல் போனதாக சொல்லப்படுவதை வெறுக்கிறேன். நான் எங்கேயும் மறைந்து போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன். நான் இருக்கும் இடம் குறித்து பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் என்னைப் பற்றிய தகவல்கள் வெளியில் தெரிவதில்லை.

நான் சில காலத்திற்கு முன்பு பப்பாரசி (புகழ்பெற்ற நபர்களை புகைப்படம் எடுக்க பின் தொடர்பவர்) கலாச்சாரத்தின் சுவையைப் பெற்றேன். ஆனால் அது எனக்கானது அல்ல என்பதை உணர்ந்து விட்டேன். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருப்பதை சரி என்று நினைக்கிறேன். நிறைய படங்களின் ஷுட்டிங் வேலைகளை முடித்துவிட்டேன். நல்ல பல பிரொஜெக்ட்களை செய்து வருகிறேன். ஆனால், அவற்றை தலையைக் குனிந்து மிகவும் அமைதியாகச் செய்கிறேன் அவ்வளவுதான் என்றார்.

மேலும், ரெட் கார்பெட் மற்றும் திரைப்பட நிகழ்வுகளைத் தவிர பொதுவெளியில் அரிதாகவே தோன்றுவதால், திரைப்படத் தயாரிப்பாளர்களால் கவனிக்கப்படுவதில்லை என்று நினைக்கிறீர்களா என்று கேட்ட போது, நான் அப்படி நினைக்கவில்லை என்று சொன்னால் அது பொய். கண்டிப்பாக நானும் என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், அதனால் எந்தவொரு வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. 

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தங்கள் நடிகர்களை இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதனால், என்னைப் போல ஒத்த எண்ணம் கொண்டவர்களிடம் மற்றும் நான் வேலை செய்ய விரும்பும் நபர்களைச் சந்திக்க விரும்புகிறேன். அந்த வழியைதான் நான் கடைப்பிடிக்கிறேன். நான் வேலை செய்யும் போது, ​​அதுவே எனது முன்னுரிமையாகிறது.

நான் 24/7 வேலை செய்யக்கூடிய ஆள் இல்லை. ஒரு வேலையை முடித்துவிட்டால், பின்னர் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன். இது ஒரு நல்ல சமநிலை என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்வி கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

G SaravanaKumar

தொலைநோக்குடன் எதிர்கால வளர்ச்சியை ஏற்படுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்- பிரதமர் மோடி

Jayasheeba

ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

Web Editor