உங்களின் மிகப்பெரிய ரசிகனாக மாறிவிட்டேன்! | அமீர்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஷ்ணு விஷால் பதிவு!

அமீர்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.  திரையுலகில் சிறந்த திரைக்கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் பாலிவுட் ஸ்டார் அமீர் கான்.  தனது…

அமீர்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

திரையுலகில் சிறந்த திரைக்கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் பாலிவுட் ஸ்டார் அமீர் கான்.  தனது நடிப்பாலும்  படைப்பாற்றலாலும் இந்தியாவை சர்வதேச அரங்கில் உச்சம் தொட வைத்த பெருமைக்குரிய  நடிகர் அமீர் கான் தந்து 59வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.  இந்நிலையில் அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அமீர்கான் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஆண்டு இறுதியில் சென்னைக்கு வந்திருந்தார்.  நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டில் தான் அவர் விருந்தினராக தங்கியிருந்திருக்கிறார்.  அமீர்கான் அம்மாவின் உடல் குணமடைந்து அன்றைய தினம் சென்னையை விட்டு அவர் கிளம்ப வேண்டிய நாளில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

இந்த சூழலில் நடிகர் விஷ்ணு விஷால் சென்னை காரப்பாக்கத்தில் தனது வீட்டை மழை நீரை சூழ்ந்துவிட்டதாகவும் உதவி செய்யுமாறும் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.  அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று விஷ்ணு விஷாலையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவத்துக்காக தங்கியிருந்த பாலிவுட் ஹீரோ அமீர்கானையும் சென்று மீட்டு வந்தனர்.

இந்நிலையில்,  அமீர்கானுக்கு வாழ்த்து தெரிவித்து விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “உங்களுடன் இவ்வளவு நெருக்கமாக நேரத்தைச் செலவிடுவதற்கும்,  உங்கள் மனிதநேய பக்கத்தைப் பார்ப்பதற்கும் நான் ஆசீர்வதிக்கப்படுவேன்.  இப்போது நான் உங்களின் மிகப்பெரிய ரசிகனாக மாறிவிட்டேன் !!!  இந்த சிறப்பு நாளில் நீங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன்… என விஷ்ணு விஷால்  இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.