நாடாளுமன்ற தேர்தலில் கொரோனாவை விட கொடூரமான பாஜகவை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அதிமுக இருக்கா என்றே தெரியவில்லை என்றும் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மேயர் பிரியா என் சகோதரி. அதை நான் உரிமையோடு சொல்வேன். என்னை சேப்பக்காத்து செல்லப்பிள்ளை என சொல்வார்கள். ஆனால் நான் துறைமுகம் தொகுதிக்கும் செல்லப் பிள்ளை தான்.
நலத்திட்ட மேடையை அரசியல் மேடையாக மாற்றி ஆழ்ந்த அரசியலை, நான் பேச நினைத்த அரசியலை முத்தரசன் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றுள்ளார்களே என நினைத்தேன். ஆனால் மாணவர்களிடம் தான் நாம் இந்த அரசியலை கொண்டு சேர்க்க வேண்டும்.
சூப்பர் செயல் பாபு நிர்வாகிகளின் பெயரை தாண்டி பயனாளிகளின் பெயரையும் வரிசையாக சொல்லி விடுவாரோ என எனக்கு பயமாக இருக்கும்.
நான்கு ஆண்டுகளில் தொட்டதெல்லாம் வெற்றி. அதைக்கொடுத்த மக்களுக்கு நன்றி. நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டால் கோவமாக இருப்பார் சேகர்பாபு. என் அழைப்பையும் எடுக்க மாட்டார். நம்பர் 1 முதல்வராக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது போல நம்பர் 1 அமைச்சராக சேகர்பாபு இருக்கிறார்.
அதிமுக ஒன்றாகவா, இரண்டாகவா, மூன்றாகவா இல்லை அதிமுக இருக்கா என்றே தெரியவில்லை. 2024 இல் மக்கள் முடிவு எடுத்துவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.
எப்படி கொரோனாவை விரட்டி அடித்தோமோ அதே போல் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கொரோனாவை விட கொடூரமான பாஜகவை விரட்டியடிக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.








