மாமனிதன் படம் பார்த்து 5 முறை அழுதேன்- நடிகர் ராஜேஷ்

மாமனிதன் படம் பார்த்து 5 முறை அழுதுவிட்டேன் என பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ராஜேஷ் கூறினார். வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ரஷ்யாவில் மாஸ்கோ சர்வதேச…

மாமனிதன் படம் பார்த்து 5 முறை அழுதுவிட்டேன் என பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ராஜேஷ் கூறினார்.

வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ரஷ்யாவில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பாராட்டு விழா நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷியன் மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாமனிதன் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் சாமிநாதன், நடிகர் ராஜேஷ், பூச்சி முருகன், இந்தோ ரஷ்யா மையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, மாமனிதன் படம் வெளியானதற்க்கு பிறகும் இவ்வளவு நாட்கள் கழித்து மிகவும் ஆழமாக படத்தை பார்த்து தொடர்ந்து பேசி வருவதற்கு மிக்க நன்றி என்றார்.

இதையும் படியுங்கள் : பணிந்தது ஆர்சிபி; 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே த்ரில் வெற்றி!

மேடையில் பேசிய நடிகர் ராஜேஷ், மாமனிதன் படத்தை என் வீட்டில் வைத்து மடிக்கணினியில் பார்க்கும் போதே 5 முறை அழுது விட்டேன். திரைப்படம் மூலம் கருத்துக்களை சொல்லும் போது அது மக்களிடம் நேரடியாக சென்று சேரும். காந்தியின் சத்யாகிரகம் மற்றும் இயேசுநாதருக்கு மேல் உள்ளது மாமனிதன் திரைப்படம் என்றார்.

சீனு ராமசாமியும் விஜய் சேதுபதியும் இணைந்து இன்னும் படங்கள் பண்ண வேண்டும் என கோரிக்கை வைத்த ராஜேஷ் ஒப்பற்ற சோவியத்திற்கு செல்லும் மாமனிதனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.