நீலகிரிக்கு என்ன தேவையாக இருந்தாலும், என்ன பிரச்சனையாக இருந்தாலும் ஓடி வருபவன் நான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக ஓடி வரும் கழகம் திமுக என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் நடைபெற்றா ஜான் சலீவன் சிலை திறப்பு விழாவில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, எல்லை கடந்த மனித நேயமிக்கவர் ஜான் சலீவன் என தெரிவித்தார். மேலும், நீலகிரியில் வசிக்கும் மூத்த பழங்குடியினர்கள் குறித்து உரிய ஆய்வு செய்த தமிழறிஞர் கால்டுவெல், நீலகிரி பழங்குடியினர்களை தொல் திராவிடர்கள் என்று சொன்னார் என்பதை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ஆளுநரை நெறிமுறை படுத்துகின்ற முதலமைச்சர், நமது முதலமைச்சர் என கூறினார். மேலும், ஆளுநர் செய்யவேண்டியவற்றை தொடர்ந்து சுட்டிகாட்டுபவர் நமது முதலமைச்சர் என தெரிவித்தார்.
மேலும், டேன் டீ (TANTEA) நஷ்டத்தில் இயங்குவது குறித்தும், அதை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வனத்துறை அமைச்சரும், நானும் முதலமைச்சரிடம் தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், கூடலூரில் உள்ள பிரிவு 17 – நிலம்பிரச்சனை தொடர்பாகவும் முதலமைச்சரிடம் தெரியப்படுத்தி இருப்பதாக கூறினார். உடனடியாக உயர் அதிகாரிகளை கூட்டி இப்பிரச்சனைக்கு அவரே தலைமை தாங்கி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் 20 புதிய திட்டங்களை, 34 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த 56 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த 28 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘வரும் 24ம் தேதி மேட்டூர் அணை திறப்பு’
நீலகிரிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை இந்த அரசு தந்துள்ளது எனவும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை தீர்வு, பழங்குடியின மக்களுக்கு மின் இணைப்பு, பட்டா உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி தான் என குறிப்பிட்டு பேசிய ஆ.ராசா, ‘தோள் கொடுப்பவன் தோழன்’ என்றும் நீலகிரிக்கு என்ன தேவையாக இருந்தாலும், என்ன பிரச்சனையாக இருந்தாலும் ஓடி வருபவன் நான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக ஓடி வரும் கழகம் திமுக தான் என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








