கடவுளுக்கு எதிரானவன் தான் கிடையாது என்றும், எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் தொடங்குவேன் என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, நடிகை அதிதி, இயக்குனர் முத்தையா, ராஜ் கிரண் மற்றும் சூரி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜீ முருகன், தன் படத்தின் கதைக்காக நடிகர் கார்த்தியை சந்திக்க தேனி சென்றேன். அப்போது தான் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதினேன் என்றார்.
மேலும் தான் எழுதிய ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளார் அது எனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறினார். பின்னர் பேசிய நடிகர் சூரி, செய்ய முடியாத விஷயங்கள் நிறைய சூர்யா செய்து வருகிறார். 2டி நிறுவனம் சார்பில் நிறைய பேருக்கு வேலை கொடுத்து வருகிறார் என்றார். இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் ராஜ்கிரண் வேட்டி கட்டுவது அழகு தான் என கூறினார்..
எவ்வளவு உழைப்பு கொடுக்க முடியுமோ அதை கார்த்தி கொடுத்து கொண்டே இருக்கிறார். கடவுளுக்கு எதிரானவன் தான் கிடையாது. நான் எந்த வேலை தொடங்கினாலும் மதுரை
மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பிப்பேன். சிலர் நான் சொன்னதை தவறாக எடுத்து கொண்டனர். நான் படிக்காதவன் அதனால் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று தான் அதை
சொன்னேன் என நடிகர் சூரி தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகை அதிதி, என்னுடைய கனவை நோக்கி பயணிக்க வைத்த எனது குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தார். தன் வீட்டை விட்டு தான் எங்கும் போனது இல்லை. ஆனால் தன்னை 2டி நிறுவனம் நன்றாக பார்த்து கொண்டதற்கு நன்றி என கூறினார். நடிகர் கார்த்தியிடம் இருந்து தினமும் நிறைய கற்று கொண்டேன். ராஜ் கிரணிடம் இரண்டு
ஜோக் தான் சொன்னேன் அவரே அசந்து விட்டார் என்றும் நகைச்சுவையாக பேசினார்.
– இரா.நம்பிராஜன்









