முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் விருது- முதலமைச்சர் பெருமிதம்

தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரமான ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கைதான் ராம்சர் உடன்படிக்கை. 1971ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டதால் அந்த நகரத்தின் பெயரில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற ஈரநிலங்களை அடையாளம் கண்டு, ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் & உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய 6 ஈரநிலங்களுக்கு  ராம்சர் ஈரநில அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். உலக அளவிலான இந்த அங்கீகாரம் தமிழ்நாடு அரசு ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்கு பொருந்திப் போகிறது என்றும் இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு தனது பாராட்டுக்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அலட்ரா ஆக்ஷன் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா!

G SaravanaKumar

இபிஎஸ் ஆட்சி அமைய பிரார்த்தனை மேற்கொள்ளும் தமிழ் மகன் உசேன்

Arivazhagan Chinnasamy

“அம்பயர்கள் விளையாடக் கூடாத இடத்தில் விளையாடுகின்றனர்”

G SaravanaKumar