தமிழ் நாடு சட்டமன்றத்தில் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சி தவெகவிடம் ஆட்சியை இழந்து எதிர்கட்சியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது :
கட்சியின் தலைவர் என்கிற முறையில் நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று கொள்கிறேன். இதுதான் நிதர்சனம். வெற்றி கிடைச்சா அதன் பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்பதில் தவறல்ல. அதுதான் நியாயம்.
இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு. தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து. எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க. தோல்வியின்போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான். ஆனால் அது பழியாக இருக்கக்கூடாது.
மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல. அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது. எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தாணும் முக்கியம். நம்மை பொறுத்தவரை, சட்டமன்றத்துல முறையான திறமையான கட்சியா நாம செயல்படணும். நம்ம அரசியல் எப்படி இருக்கணும்னா.
கடந்த ஐந்தாண்டுகள்ல நாம உருவாக்குன திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து செயல்பட வைக்கணும். நமக்குள்ளயே ஒற்றுமை இல்லனா – வெற்றி என்பது சாத்தியம் இல்ல. என்னைப் பொறுத்தவரையில அடிமட்டத் தொண்டர்கள் – அடிமட்ட நிர்வாகிகள் முழுப்பங்களிப்பைத் தரும் வகையில் நாம அவங்களை தயார் செய்யணும். இவ்வாறு அவர் கூறினார்.







