முக்கியச் செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு

ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான விடுதிக்குச் சென்றுள்ளார். அவருடைய தோழி சீக்கிரமாகவே வீட்டுக்குச் சென்றுவிட அந்த சிறுமி அங்கிருந்த சிறுவர்களுடன் பேசியுள்ளார். அப்போது, அந்த சிறுவர்கள் காரில் வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறியுள்ளனர். சிறுமியும் அவர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுவர்கள் அந்த சிறுமையயை காரிலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவம் குறித்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, போலீஸார் நேற்று சாதுதீன் மாலிக் என்ற மாணவரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் சிறுமியை 5 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை  வீடியோ வடிவில் பார்க்க – https://www.youtube.com/watch?v=8AyBBwR3OPk

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள். 

 

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுவாணியில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசு! கோவைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!!

Jayasheeba

புதிய தடுப்பணைகள் கட்ட முதலமைச்சர் உத்தரவு

Halley Karthik

நடிகர் பயில்வானை கைது செய்யக் கோரிக்கை; மனு அளித்த பெண்

G SaravanaKumar