தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி துபாயிலிருந்து – ஐதராபாத்திற்கு கடத்தி வந்த விமான பயணியை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
துபாயிலிருந்து ஐதராபாத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரை விமான நிலைய சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவர் கொண்டு வந்திருந்த ட்ராலி பேக்கில் பொருத்தப்பட்டிருந்த ஸ்குருக்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகத்தின்பேரில் ஸ்குரு ஒன்றை கழற்றி சோதனை செய்த போது அது தங்கத்தில் ஆன ஸ்குரு என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் 453 கிராம் எடையுள்ள தங்க ஸ்குரூக்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதற்கிடையே தங்கத்தை ஸ்க்ரூக்களாக மாற்றி கடத்தி வந்த குற்றத்திற்காக சுங்க துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
—-கோ. சிவசங்கரன்
திருப்பதி- தெலுங்கானா







