கர்நாடகாவில் நாகப் பாம்பு உருவில் இறந்த கணவர் வந்துள்ளதாக நம்பி 4 நாட்களாக நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்
மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் நாகப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. மானஷா நாகபாம்பை வீட்டுக்கு வந்ததும் இறந்துபோன கணவர் மறுபிறவியாக நாகப் பாம்பாக வந்திருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். 4 நாட்களாக அந்த பாம்புடனே அவர் தங்கியிருந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மானஷா தனது கணவர் தான் பாம்பு உருவில் வந்துள்ளார் எனக் கூறி பாம்பை பிடிக்கக் கூடாது என்றும், வீட்டில் இருந்து வெளியேற்றக் கூடாது என்றும் கூறி தகராறு செய்தார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
-மணிகண்டன்








