கரூர் அருகே, மதுபோதையில், மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன், பயத்தில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கரூர் காந்திகிராமம் இந்திராநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், அப்பகுதியில் பழைய துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சின்ன பொண்ணு என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் மூவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மதுபோதைக்கு அடிமையான சுப்பிரமணியன் அடிக்கடி, மது அருந்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல நேற்று மாலை மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மிதமிஞ்சிய மதுபோதையில் சின்னப்பொண்ணுவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். பின்னர், செய்வதறியாமல் திகைத்த சுப்பிரமணியன், பயத்தில், வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விசாரணை இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







