பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரம் இல்லையென மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு

சென்னையில் பெண் குழந்தைகள், காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் தங்கியிருப்பது  தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற…

சென்னையில் பெண் குழந்தைகள், காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் தங்கியிருப்பது  தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. 
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக வெளியான விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே உள்ள வீடற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும் ஆங்கில செய்தித்தாளில் செய்தி வெளியானது.  அதில், போதிய கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண் குழந்தைகள் அங்குத் தங்கி வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்  ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.