பெரிய நகரங்களில் வேலை தேடி அலைவோர் பலவித கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் எத்தனையோ உதவிகள் பற்றி கேள்விபட்டாலும் இப்படி ஒரு உதவி உங்களை ஆச்சர்யப்படுத்தும்.
ஒவ்வொரு நாட்டிலும் இளைஞர்களின் எண்ணிக்கை கனிசமாக உள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் இருக்கின்ற நாட்டில் வருங்காலம் இளைஞர்களுக்குத்தான் என்று சொல்லும் அளவுக்கு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளனர். மக்கள் தொகை பெருக , பெருக வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார மற்றும் உணவுத் தேவைகள் அதிகரித்து வருகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல முக்கிய பெரு நகரங்களில் வேலை தேடி அலைவோரின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். எப்படியாவது கஷ்டப்பட்டு வேலை தேடி பணம் சம்பாதித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த ஏராளமான இளைஞர்கள் கதைகள் உள்ளன.
இப்படி பெரு நகரங்களில் எந்த துணையோ , உதவியோ இல்லாமல் பட்டதாரிகள், இளைஞர்கள் தவித்து வருகின்றனர். இருக்க இருப்பிடம், உண்ண உணவு போன்ற அடிப்படை தேவைகள் வேலை தேடுவோருக்கு கிடைத்தால் போதும் அவர்கள் துணிச்சலுடன் நேர்முகத் தேர்வில் பங்கெடுத்து நல்ல வேலையில் சேர்ந்து விடுவார்கள்.
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமோ நகரத்தில் ஒரு சலவை நிலையம் இயங்கி வருகிறது. இந்த சலவை நிலையத்தில் புதிதாக வேலை தேடும் இளைஞர்களின் துணிகளை சிறந்த முறையில் துவைத்து , முறையாக அயர்ன் செய்து நேர்முகத் தேர்விற்கு செல்வதற்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சேவையை அந்த நிறுவனம் இலவசமாக செய்து வருகிறது.
ஆர்ச்சர் கிளீனர்ஸ் என்னும் இந்த நிறுவனம் தங்களது அறிவிப்பு பலகையில் “ நீங்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா..? நேர்முகத் தேர்விற்கான உங்களது உடையை இலவசமாக நாங்கள் துவைத்து தருகிறோம்” என எழுதியுள்ளனர்.







