சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடங்கும்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 21ம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16வது ஐபிஎல் கடந்த 31ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 21ம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் கடந்த 31ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரும் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CDE லோயர் சீட் டிக்கெட் ரூ.1500, ஐஜேகே அப்பர் சீட் டிக்கெட் ரூ.2000, ஐஜேகே லோயர் சீட் ரூ.2500, CDE அப்பர் டிக்கெட் ரூ.3000, KMK டெரஸ் டிக்கெட் ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.