முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பை எப்படி ‘பாதுகாப்பாக’ பயன்படுத்துவது?

கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. நம்மில் பலருக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதற்கான மிகவும் பிரபலமான கருவி இதுவாகும். இதில் நமது பெற்றோர்களும் அடங்குவர். இருப்பினும், மற்ற எல்லா ஆன்லைன் கருவிகளைப் போலவே வாட்ஸ்அப்பிலும் ஒருவர் பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வுக்காக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம்

செய்திகளை அனுப்பும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள், வாட்ஸ்அபில் ஃபார்வர்டு செய்யப்பட்ட அனைத்து செய்திகளையும் உடனடியாக ஃபார்வர்டு செய்யாதீர்கள். பகிர்வதற்கு முன் மறுபரிசீலனை செய்யுங்கள். செய்தி உண்மையா என்பதை உறுதி செய்யுங்கள் அல்லது அந்த செய்திக்கு ஆதாரம் இல்லாமல் இருந்தால், அது போலியான தகவலாக இருக்கலாம் எனக் கருதி அதை அனுப்புவதைத் தவிர்த்துவிடுங்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டு-படி சரிபார்ப்பை இயக்கத்தில் வைக்கவும், இதனால், பயனர்கள் தங்கள் கணக்கில் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது, இதற்கு உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மீட்டமைத்து சரிபார்க்கும்போது ஆறு இலக்க PIN தேவைப்படுகிறது. இதனால் சிம் கார்டு திருடப்பட்டாலோ, தொலைப்பேசி திருடப்பட்டாலோ இது உதவியாக இருக்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் பயனர்களுக்குக் கணக்குகளைத் தடுக்க எளிய வழியை வழங்குகிறது. பிரச்சனைக்குரிய செய்திகளை எதிர்கொண்டால் அவர்கள் எளிதாக வாட்ஸ்அப்பில் புகாரளிக்க முடியும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, வாட்ஸ்அப் இப்போது செய்திகளை உண்மைச் சரிபார்ப்பவர்கள் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், புகாரளிக்கப்பட்ட செய்திகளை தங்கள் தொலைப்பேசியில் வைத்திருப்பதற்கான விருப்பத்தை வழங்குகிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

உரையாடல்களைத் தனிப்பட்டதாக வைத்திருங்கள் தனிப்பட்ட அல்லது குழு அரட்டையில் அனுப்பப்படும் புதிய செய்திகள் பயனர்கள் தேர்ந்தெடுத்த காலத்தைப் பொறுத்து மறைந்துவிடும் வகையில் அனுப்பப் பெறமுடியும் என்பதனை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

ஆன்லைனில் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்தவும் முகவரி, தொலைப்பேசி எண், கடவுச்சொற்கள், கிரெடிட்/டெபிட் கார்டு எண்கள் மற்றும் வங்கிக் கணக்குத் தகவல் போன்ற முக்கியமான தகவல்களைப் பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும்.

கிளிக் செய்வதில் அல்லது நம்புவதில் கவனமாக இருங்கள் ஸ்பேம் செய்திகள், இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடிகளுக்கு உட்படலாம். நாம் விழிப்புடன் இருக்கும் நெட்டிசன்களாக இருந்தாலும், நம்மைச் சார்ந்த பலரும் இத்தகைய மோசடிகளுக்கு இரையாகக் கூடும். எனவே, இதனை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களை பாதுகாத்திருங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் சிவசங்கர்

Arivazhagan CM

“இது ஒரு மகத்தான வெற்றி பயணம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Arivazhagan CM

மனதின் குரல்: ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன – பிரதமர் நரேந்திர மோடி

Arivazhagan CM