மத்திய அரசின் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிராக தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய வீரர்களுக்கு சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
The Ministry of Home Affairs (MHA) decides to reserve 10% vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveers.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022
இந்த சூழலில் தமிழ்நாட்டில் சென்னையிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகில், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையில் இறங்கினர்.
The MHA also decides to give 3 years age relaxation beyond the prescribed upper age limit to Agniveers for recruitment in CAPFs & Assam Rifles. Further, for the first batch of Agniveer, the age relaxation will be for 5 years beyond the prescribed upper age limit.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அக்னிவீரர்களுக்கு சிஏபிஎஃப் (Central Armed Police Forces) எனப்படும் மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைஃபில் படைப்பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்த இரண்டு படைப்பிரிவில் சேரும் முதல் பேட்ச் வீரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும், அடுத்தடுத்த பேட்ச்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.