இன்ஸ்டாகிராமில் சைலண்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி?

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றும், இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதுமான இன்ஸ்டாகிராம் செயலியில் பல வசதிகள் உள்ளன. புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிரபலமானவர்களை…

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றும், இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதுமான இன்ஸ்டாகிராம் செயலியில் பல வசதிகள் உள்ளன. புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிரபலமானவர்களை பின்தொடரலாம். உங்களை பின்தொடர்பவர்களுக்கு நீங்கள் எழுத்து வடிவில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். அந்தத் தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கப் பெறும்போது அறிவிப்பு சப்தம் இல்லாமல் சைலண்டாக அனுப்புவதற்கும் இப்போது புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் அளித்துள்ளது. சைலண்ட் மெசேஜை அனுப்புவதற்கான படிகள் பின்வருமாறு:
உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப் ஆகியவற்றில் இருந்து இன்ஸ்டாகிராமை ஓபன் பண்ணவும். பிறகு, செயலியின் மேல்புறம் வலது மூலையில் மெசேஜ் ஐகானை கிளிக் செய்யவும். பிறகு, யாருக்கு நீங்கள் சைலண்ட் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த நபரைத் தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகளுக்கு முன் @silent என்பதை டைப் செய்யவும். உதாரணத்துக்கு வணக்கம் என்று ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் @silent என்பதை வணக்கம் என்று வார்த்தைக்கு முன் டைப் செய்ய வேண்டும். இதன் பிறகு நீங்கள் செண்ட் பட்டனை கிளிக் செய்யவும். பின்னர், அந்த நபருக்கு அறிவிப்பு சப்தம் எதுவும் இல்லாமல் அந்த மெசேஜ் சென்று சேரும்.
சப்தம் எதுவும் இல்லாமல் மியூட் செய்தும் சாட் செய்யும் வசதியும் இன்ஸ்டாகிராமில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.