Skip to content
January 12, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » how to make money in youtube channel
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கலாமா?

யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கலாமா? என்ற சந்தேகம், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பலரின் கேள்வியாக உள்ளது, எப்படி சம்பாதிக்கலாம்? வழிமுறை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள்…

Author Avatar

Arivazhagan Chinnasamy

December 16, 20215:48 pm Arivazhagan CMHow to make money In youtube channel?YouTube account

யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கலாமா? என்ற சந்தேகம், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பலரின் கேள்வியாக உள்ளது, எப்படி சம்பாதிக்கலாம்? வழிமுறை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தன்வசப்படுத்திய ஒரு சாதனம் என்றால் அது ஸ்மார்ட் போன். அப்படி ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் மிக முக்கிய செயலி என்றால், அது யூடியூபாக உள்ளது. யூடியூபை பார்வைக்காக மட்டும் பயன்படுத்தாமல், இன்று பலர் சம்பாதியத்திற்காவும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதனை மறுக்க முடியாது.

தற்போது, தொழில்நுட்பம் விருவிருவென வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சிக்கு ஏற்ப மக்களும் தங்களை அப்டேட் செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சி, ஸ்மார்ட்போனின் வருகைக்குப் பிறகு அசுர வேகம் பிடித்தது எனலாம். இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில், குறைந்த விலையில் டேட்டா கிடைக்கத் தொடங்கியதும். இணையம் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இதில், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. முக்கியமாக, இலவசமாகக் கிடைக்கும் யூடியூப்பில் பகிரப்படும் வீடியோக்கள், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

யூடியூபில் சம்பாதிக்க, முதலில் நீங்கள் ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்க வேண்டும். அதற்கு முதலில், ஒரு கூகுள் அக்கவுன்ட் தொடங்கவேண்டும். அந்த அக்கவுன்டை வைத்து யூடியூபில் சேனல் ஒன்றைத் தொடங்கமுடியும். அதற்குப் பிறகு உங்களுக்குப் பிடித்தவாறு யூடியூபில் வீடியோக்கள் பகிரலாம். அந்த வீடியோக்கள் மக்கள் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அடுத்து, நீங்கள் பதிவிடும் காணொளிகளில் Copyright பிரச்னை இருக்க கூடாது. உங்களுடைய காணொளிகளில் Copyright பிரச்னை இருந்தால், யூடியூப் நிறுவனமே உங்களுக்குத் தெரியப்படுத்திவிடும். அதன்பிறகும் நீங்கள் அந்த காணொளியை பதிவிட விரும்பினால், Copyright உரிமையாளர் சம்மதித்தால் மட்டுமே உங்கள் காணொளியை யூடியூப் நிறுவனம் அனுமதிக்கும். இதற்கு, உங்கள் காணொளியின் முழு வருமானத்தையும் Copyright உரிமையாளரிடம் கொடுக்க நேரிடும் அல்லது வீடியோவை நீக்க நேரிடும்.

நீங்கள் துவங்கிய, யூடியூப் கணக்கின் செட்டிங்க்ஸில் உள்ள channel status and features என்பதை கிளிக் செய்தால் உங்கள் சேனல் பற்றிய அனைத்து விபரங்களும் அதில்வரும். அங்கு Monetization என்பதை துவங்கினால் மட்டுமே உங்களால் சம்பாதிக்க முடியும். யூடியூப்பில் சம்பாதிக்க நீங்கள் துவங்கிய சேனல் ஆயிரம் subscriber-களை பெற்றிருக்க வேண்டும். மேலும், கடந்த ஒரு வருடத்தில் உங்கள் சேனல் 4,000 மணி நேரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், எவ்வித Copyright பிரச்னையும் சந்தித்திருக்க கூடாது.

மேற்குறிப்பிட்டவைகளை, நீங்கள் உருவாக்கிய சேனல், பூர்த்தி செய்திருந்தால் யூடியூப் நிறுவனம் உங்கள் சேனலை ஆய்வுசெய்து, பின்னர் தனது யூடியூப் பார்ட்னர் புரொக்ராமின் கீழ் இணைத்துக்கொள்ளும். இதற்குப் பின், உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். Monetization மூலம் யூடியூபின் விளம்பரங்கள் உங்கள் வீடியோக்களில் தோன்ற ஆரம்பிக்கும். இந்த விளம்பரங்கள், Google AdSense மூலம் கிடைக்கும், உங்கள் சேனல் பார்வையாளர்கள் இதை ஸ்கிப் செய்தால் ஒரு தொகையும், முழு விளம்பரத்தையும் பார்த்தால் ஒரு தொகையும், அந்த விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு தொகையும் கிடைக்கும். இது, உங்கள் வீடியோவைப் பார்க்கும் பார்வையாளர்களை பொறுத்து மாறுபடலாம். ஒவ்வொரு மாதமும் மொத்தமாக உங்கள் சேனல் $100-க்கு மேல் விளம்பர வருவாய் ஈட்டினால், அந்தத் தொகையை கூகுள் நிறுவனம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு செலுத்திவிடும்.

நீங்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களுக்கு சில விதிமுறைகள் இருக்கும். அந்த விதிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில், உங்கள் காணொளிகளை யூடியூப் தானாக முன்வந்து நீக்கி விடும் என்பதனை நினைவில் வைக்க வேண்டும். அதேபோல, தினசரி வீடியோக்கள் பதிவேற்றம் செய்பவர்களுக்கு subscriber-கள் அதிக அளவில் வர வாய்ப்புகள் உள்ளது. subscriber எண்ணிக்கைக்கும், வீடியோ பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இல்லை என்றாலும், subscriber எண்ணிக்கைதான் நம்மை தொடர்ந்து வீடியோகளை பதிவிடவைக்கும். ஒரு லட்சம் சந்தாதாரர்களை வைத்திருக்கும் சேனலுக்கு சில்வர் பிளே பட்டன், ஒரு மில்லியன் சந்தாதாரர்களுக்கு மேல் இருந்தால் கோல்ட் பிளே பட்டன், பத்து மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிவிட்டால் டைமன்ட் பிளே பட்டன் என வளர்ச்சிக்கு ஏற்ப்ப அவ்வப்போது யூடியூப் உங்களை அங்கீகரித்து பரிசுகளையும் அனுப்பும். அதேபோல, ஒரு லட்சம் subscriber-களை நெருக்கும்போது, உங்களால் உங்கள் சேனலை, verified YouTube account-ஆக பயன்படுத்த முடியும்.

தொடர்ந்து, மக்கள் விரும்பும் காணொளிகளை நீங்கள் பதிவிடும் போது, உங்களால் யூடியூப் மூலம் சம்பாதிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், நாம் ஒரு செய்தியை பதிவிடும்போது மிகுந்த கவனத்துடன் பதிவிட வேண்டும். ஏனெனில், யூடியூபில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதனை மறந்துவிடக்கூடாது.
சமிபத்தில், யூடியூபில் பொருளாதார ரீதியாகவும், மக்கள் மத்தியில் பிரபலமாகவும் வளர்ந்தவர்கள் ஏறாலம், பெரிய முதலீடு இல்லாமல் தங்களின் திறமையை வெளிப்படுத்தி நடிகராக, நடிகையாக, இயக்குநராக, கேமிரா மேனாக, எடிட்டராக தங்களை அறிமுகம் செய்து இன்று பிரபலமாக மாறியுள்ளவர்களை கண்முன் பார்க்கமுடிகிறது.

யூடியூப் நிறுவனம், குறிப்பிட்ட பிரிவின் கீழ்தான் வீடியோக்களை பதிவிட வேண்டும் என எந்த விதியையும் கொடுக்கவில்லை. ஆனால், சில கட்டுப்பாடுகளை மட்டும் வைத்துள்ளது. அதனால், நாம் நினைக்கும், நாம் பார்க்கும் அனைத்தையும் பதிவிட முடியும். யூடியூபை பொருத்தவரையில், சொந்த கருத்துக்கும் சுயமாக உருவாக்கும் வீடியோக்களைதான் ஊக்குவிக்கிறது.

அதேசமயம், இன்று அனைவரிடமும் ஒரு யூடியூப் சேனல் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், நாம் உருவாக்கும் – பதிவிடும் வீடியோ தொழில்நுட்ப ரீதியாகவும், தகவல் ரீதியாகவும் இருந்தால் மட்டுமே பலரையும் சென்று சேரும். அதற்காக மெனக்கெடுவது என்பது ஒருபோதும் வீன்போகாது எனலாம்.

ஸ்மார்ட் போன் வருகைக்கு முன்பு, ஒரு புகைப்படம் எடுப்பது என்பதே பெரிய விசயம். இன்னும் சொல்ல வேண்டுமானால், போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்று மக்கள் நம்பும் சூழ்நிலை இருந்தது. ஆனால், இன்று குழந்தை கருவில் பதிய துவங்கிய நாள் முதல், பிறந்து சில ஆண்டுகள் ஆனதும் தன்னை தானே செல்பீ எடுக்கும் அளவிற்கு பக்குவப்பட்டுள்ளோம், அறிவியல் வளர்ச்சியை ஏற்றுள்ளோம் எனலாம். இப்படி இருக்க, வீடியோ கேமீரா வைத்து தான் வீடியோ எடுக்க வேண்டும் என்றில்லை, நம்மிடம் உள்ள ஸ்மார்ட் போனை பயன்படுத்தியே வீடியோகளை எடுக்கலாம்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், Mobile Journalist போன்ற யூடியூப் இயக்குனர்கள் தங்களின் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி நடப்பு அரசியல் செய்திகளை, நேர்காணல்களை உடனுக்குடன் பதிவிட்டு வந்தார்கள், தற்போது 1.04M subscriber-களை கொண்டு இயங்கி வருகின்றனர். இன்று வேண்டுமானால், அவர்களின் வளர்ச்சியால் வீடியோ கேமிரா கொண்டு வீடியோ எடுத்து வெளியிடலாம். இதை போலவே, Village food factory, Gpmuthu Official, Red Pix, BehindwoodsTV, NewsGlitz, black sheep, nakkalites என பல வளர்ந்த யூடியூப் சேனல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதேபோல, யூடியூபில் இயங்க, சம்பாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதனையும் அறிந்துகொள்ள முடிகிறது. சமீபத்தில் Rithu Rocks – என்ற பக்கதில் இருந்த வீடியோக்கள் விருவிருவென பரவியது. தற்போது, 1.86M subscribers கொண்ட அந்த சேனல் ஒரு குட்டி பையனின் நடிப்பாலும், அந்த வீடியோக்களை எடுத்து வடிவமைத்து வெளியிட்டு அவர்களின் அப்பா மற்றும் அம்மாவின் உழைப்பாலும் வைரலானது, பலரையும் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் Rithu Rocks – குழுவுக்கு கிடைத்தது. தொடர்ந்து பல திரை வாய்ப்பும் அவர்களை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதன்மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், முழு நேரமும் யூடியூபில் இயங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நம்முடைய செயல்பாடுகளை, பகிர நினைக்கும் கருத்துகளை வீடியோக்களை மக்கள் ரசிக்கும் வகையில் பகிர்வதால் அதன்மூலம் சம்பாதிக்கலாம் என்பதே! அதற்கு இன்னும் ஒரு உதாரணம் Pimpom Lifestyle, சுமார் 713K subscriber – களை கொண்ட இந்த சேனல், அவர்களின் தினசரி நடவடிக்கைகளை வீடியோவாக எடுத்து பதிவிட்டு நல்ல முறையில் விளம்பரங்களை பெற்று இயங்கி வருகிறது.

எப்படி சேனல் துவங்குவது, எதுபோன்ற வீடியோ எடுப்பது, எதை பயன்படுத்தி வீடியோ எடுக்கலாம் என்பதை எல்லாம் பார்த்தோம், இதைவிட முக்கியமான ஒன்று, எடுக்கும் வீடியோகளை வடிவமைப்பது, வீடியோ திரையில் வைக்கும் துவக்க Thumbnail எப்படி உருவாக்குவது என்பது முக்கியமானதாக பார்க்க வேண்டும். ஏனெனில், அதுவே பார்வையாளர்களை நம் சேனல் பக்கம் ஈர்க்கும். அதுவே நமக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும்.

Thumbnail-ல் வைக்கும் தலைப்பு பார்த்தவுடன், கவரும் வகையில் இருக்க வேண்டும். அதனை வடிவமைக்க கம்பியூட்டரில் Adobe Photoshop போன்ற Software – கள் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போனில் பயன்படுத்த பல செயலிகள் இலவசமாக Google Play – ல் கிடைக்கும். அதேபோல, Video Editing – க்கு, Adobe Premiere Pro போன்ற Software – கள் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போனில் பயன்படுத்த பல செயலிகள் இலவசமாக Google Play – ல் கிடைக்கும். யூடியூப் சேனலில் பணம் சம்பாதிக்கலாமா? என்ற சந்தேகம் இனி தேவை இல்லை, உறுதியாக சம்பாதிக்க முடியும்!

  • மு.சி. அறிவழகன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

தேசிய இளைஞர் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…..!

By Web Editor January 12, 2026

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

By Web Editor January 12, 2026

டெல்லி ; விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு…!

By Web Editor January 12, 2026

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு – டிடிவி தினகரன் கண்டனம்!

By Web Editor January 12, 2026
#ट्रेंडिंग हैशटैग:Arivazhagan CMHow to make money In youtube channel?YouTube account

Post navigation

Previous Previous post: டெல்லியிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை
Next Next post: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி வலியுறுத்தல்
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading