ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு. பிறப்புச் சான்றிதழ் மிக அவசியமான ஒரு ஆவணமாகப் பார்க்கப்படுகின்றது. முன்பெல்லாம் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்குச் சென்று காத்திருந்து பெற…

ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

பிறப்புச் சான்றிதழ் மிக அவசியமான ஒரு ஆவணமாகப் பார்க்கப்படுகின்றது. முன்பெல்லாம் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்குச் சென்று காத்திருந்து பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால், தற்போது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று யூசர் ஐடி மற்றும் பாஸ்வேட் செலுத்தி லாகின் செய்ய வேண்டும். (யூசர் ஐடி இல்லை என்றால் புதிய ஐடியை உருவாக்க வேண்டும்) இரண்டாவதாகப் பிறப்பு / இறப்பு என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து, அதில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்குக் குழந்தை பிறந்த மாவட்டம், குழந்தை பிறந்த டவுன் பஞ்சாயத்து, பெற்றோரின் கைப்பேசி எண், பெற்றோரின் மின்னஞ்சல் முகவரி, குழந்தையின் பிறந்த தேதி, குழந்தையின் பாலினம், குழந்தையின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், தாயின் ஆதார் எண், தந்தையின் ஆதார் எண், நிரந்தர முகவரி, அஞ்சல் குறியீடு, குழந்தை பிறந்த இடம், குழந்தை பிறந்த மருத்துவமனை / நிறுவனத்தின் பெயர்,

அண்மைச் செய்தி: ‘புதுக்கோட்டையில் ஒருவருக்கு குரங்கம்மை?’

மருத்துவமனையின் வார்டு எண், தெரு எண், தாயின் விவரங்கள், திருமணத்தின்போது தாயின் வயது, பிரசவத்தின்போது தாயின் வயது, குழந்தையின் எடை, உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, பிரசவத்தின் தன்மை, யாருடைய துணையுடன் பிரசவம் ஆனது கர்ப்ப காலம் [வாரங்களில்] போன்ற தகவல்களைச் சரியாக உள்ளிட்டுச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு, மின்னஞ்சல் முகவரி கைப்பேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

https://tnreginet.gov.in/portal/ வழியாகப் பதிவு செய்யக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும், அதன்படி, கட்டண விவரம் என்ற பக்கத்தில் சென்று செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தலாம். பிறப்பு இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பெறுவதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.305/- அதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த பதிவுக்குப் பிறகு சில நாட்களில் பிறப்பு சான்றிதழ் பதிவாகி இருக்கும் அதனை நாம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.