லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள “ஆர் யூ ஓகே பேபி “ திரைப்படம் எப்படி இருக்கிறது விரிவாக காண்போம்.
மங்கி கிரியேட்டிங் லேப்ஸ் தயாரிப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது ஆர் யூ ஓகே பேபி திரைப்படம். வளர்ப்பு தாய்க்கும் பெற்ற தாய்க்குமான பாச போராட்டத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதனை விரிவாக பார்க்கலாம்.
இப்படத்தில் நடிகர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி , அபிராமி , கலைராணி,
மிஷ்கின், அசோக் முருகா, முல்லை, அனுபமா குமார், வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை
முல்லையின் கணவரான முருகா அசோக் தன்னை கொடுமைக்கு உள்ளாக்குவதால் தான் பெற்றெடுக்கும் பிள்ளையை தத்து கொடுக்கிறாள். அக்குழந்தை சமுத்திரக்கனி அபிராமி தம்பதியிடம் வளர்கிறது. ஒரு கட்டத்தில் தனக்கு மீண்டும் பிள்ளை வேண்டும் என முறையிட்டு சொல்லாதது உண்மை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முல்லை. இந்த பிரச்னை நீதிமன்றத்திற்கு செல்கிறது. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
படத்தை ஏன் பார்க்க வேண்டும்
ஒரு குழந்தையை தத்தெடுக்கும் போது அதற்கான நெறிமுறைகள் என்னென்ன உள்ளது என்பதை தத்தெடுக்கும் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல லிவ்விங் ரிலேஷன்ஷிப்-ல் ஏற்படும் பிரச்னைகள். Induced Lactation இதைப் பற்றிய விஷயங்களும் இப்படத்தில் கூறப்பட்டுள்ளது. சமூகத்திற்கு தேவையான விஷயங்களை எடுத்துரைக்கிறது இப்படம்.
லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே தனியார் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட உண்மை சம்பவங்களையும், முரண்களை இந்தப் படம் மூலம் தெரிவித்துள்ளாரா என்ற கேள்வியும் உண்டு.
இசை மற்றும் ஒளிப்பதிவு :
என் குழந்தை எனக்கு கிடைக்காதா என்று ஏங்கும் தாயின் வலிக்கேற்ப இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. வளர்ப்பு தாய் மற்றும் பெற்ற தாயின் பாசப்போராட்டத்தில் தேங்கி இருக்கும் அன்பின் வழியே காட்சிகள் ஒவ்வொன்றையும் அருமையாக வெளிக்காட்டி இருக்கிறார் கிருஷ்ண சேகர்.
மல்டி ஹீரோ கான்செப்ட், ஒரு ஆள் 100 பேரை அடிக்கும் சண்டைக் காட்சிகள், கூலர்ஸ போட்டுக்கிட்டு அதிரடியா நடந்து வருவது போன்ற படங்கள் இப்போதெல்லாம் மக்களுக்கு அதிகம் பிடித்து விட்டது. எனவே, நாட்டுக்குத் தேவையான விஷயங்களை எடுத்துச் சொல்லும் படங்கள் வெற்றி பெறுவது பொதுமக்களின் கைகளில் உள்ளது.








