ஏ சி டி சி நிறுவனத்தின் மீது கானத்தூர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக இந்த வாகன நெரிசலில் முதல்வரின் கான்வாய் வாகனமும் சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பலரும் அரங்கத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சீட் ஒதுக்கீடுகள் சரியில்லை என்றும் டிக்கெட் எடுத்த பலரையும் திருப்பி அனுப்பியதாக கூறி சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்ட காரணம் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். மேலும் முதற்கட்ட விசாரணையில் இந்நிகழ்ச்சியில் 25,000 பேர் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக காவல்துறையிடம் அனுமதி பெற்றதும், அதை விட அளவுக்கதிகமாக கூட்டம் வந்ததும் தெரியவந்துள்ளது.







