“விருமன்” அனைத்தும் கலந்த கிராமப்புற திரைப்படம். இயக்குநர் முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணியில் மற்றொரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் படமாக அமைந்துள்ளது.
ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் இன்று வெளியான திரைப்படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கார்த்தியோடு அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொம்பன் படம் போலவே கிராமத்துப் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இன்று திரையரங்கில் வெளியான விருமன் திரைப்படத்தில் முதல் நாள் முதல் காட்சி பற்றி ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான குடும்ப திரைப்படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விருமன் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் செம்ம ஜாலியான கதாபாத்திரம், ஓப்பனிங் காட்சியில் குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு திருவிழா கூட்டத்தில் ரசிகர்களுடன் சண்டையிடும் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், அண்ணன் செண்டிமெண்ட் ,ரொமன்ஸ், காமெடி மற்றும் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கிராமப்புற திரைப்படமாக விருமன் முத்தையாவின் மற்றொரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படமா அமைந்துள்ளதாக என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
உணர்வுப்பூர்வமான உட்கருவுடன் படத்தைச் சரியாகத் தொகுத்துள்ளார் இயக்குநர் முத்தையா எனவும், நடிகை அதிதியின் உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளில் அவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டுகிறது.இது சிறந்த அறிமுக படமாக அமையும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.







