’பொன்னியின் செல்வன்’ எப்படி இருக்கிறது? – சோஷியல் மீடியா ரிவ்யூஸ்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பலரிடம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் இப்படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின்…

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பலரிடம் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் இப்படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் இன்று இத்திரைப்படம் வெளியானது. அதிகாலையிலேயே மேளதாளங்களுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களில் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை குறித்த நேர்மறையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் பலர் படம் குறித்த விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரிஷிகேஷ் என்பவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகள் பிரமாண்டமாக இருந்தது என்றும், இயக்குநர் மணிரத்னம் 155 நாட்களில் இரண்டு பாகங்களையும் எப்படி படமாக்கினார் என்பதை நினைத்துபார்க்கக்கூட முடியவில்லை என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நவீன் என்பவர், பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குநர் மணிரத்னத்தின் அசாதாரண வெளிப்பாடு என்றும், இது நம்மை சோழர்களின் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் என்பவர், பொன்னியின் செல்வன் முதல் பாகம் வேற வெவல் படம் என்றும், தமிழ் சினிமாவின் பெருமை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது என தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பிரபாகரன், என்பவர் படத்தின் முதல் பாதி அருமையாக இருந்தது என்றும், விக்ரம் மற்றும் கார்த்தி தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்றும், காட்சிகள், இசை மற்றும் திரைக்கதை அனைவரையும் கவர்ந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

நவநீத் என்பவர், இத்திரைப்படம் இயக்குநர் மணிரத்னத்தின் பிளாக்பஸ்டர் மூவி என்றும், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயம்ரவி, ஜெயராம் என அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். திரைப்படம் சற்று மெதுவாகச் சென்றாலும் அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.