கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன?

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்க அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில்…

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்க அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் உள்ளது. இதனை, யுனெஸ்கோ புராதன சின்னமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்ககோரி வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், புதிய கட்டுமானங்களை அப்புறப்படுத்தி, பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அண்மைச் செய்தி: இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன? என கேள்வி எழுப்பினர். கட்டுமானங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்க, தொல்லியல் துறைக்கும், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.