முக்கியச் செய்திகள் தமிழகம்

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களுக்கு சிறைக் காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி அன்று நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது நாகை மீனவர்களின் 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்த இலங்கை மீனவர்கள், அதிலிருந்த 21 பேரையும் சிறைபிடிக்க முயற்சித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே 56 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு பின்பும் தாயகம் திரும்பாத நிலையில், மேலும் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது, சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களுக்கு வரும் 21-ம் தேதி வரை சிறைக் காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மணிப்பூர் முதலமைச்சராக பைரன் சிங் ஒருமனதாக தேர்வு

G SaravanaKumar

ஆதாரங்களுடன் புகார்கள் கிடைத்ததால் ரெய்டு நடக்கிறது-சட்டத் துறை அமைச்சர் ரகுபதி

Web Editor

மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் – ப.சிதம்பரம் சாடல்

EZHILARASAN D