“மாரி செல்வராஜ் எப்படி இதைச் செய்தார்.. பொறாமையா இருக்கு.. ” – வாழை திரைப்படத்தை பாராட்டிய #DirectorManiratnam

“மாரி செல்வராஜ் எப்படி இதைச் செய்தார் என்பதை நினைத்து பொறாமையா இருக்கிறது” என  வாழை திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.  மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. இப்படத்தில் குழந்தை…

"How did Mari Selvaraj do this.. Jealous.. " - #DirectorManiratnam who appreciated the movie Banana

“மாரி செல்வராஜ் எப்படி இதைச் செய்தார் என்பதை நினைத்து பொறாமையா இருக்கிறது” என  வாழை திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார். 

மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்த டிரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வாழை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், நெல்சன் திலீப் குமார், நடிகர் சரத் குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வாழை படத்தைப் பற்றியும் இயக்குநர் மாரி செல்வராஜின் உழைப்பு பற்றியும் பேசினர். இதன்பின்னர் காணொலி வாயிலாக பேசிய இயக்குநர் மணிரத்னம் தெரிவித்ததாவது..

“மாரி செல்வராஜ் ஒரு சிறப்பான இயக்குநர். மிகத் திறமையாக கலைஞர்களை கையாளக்கூடியவர்.மாரியின் மற்ற படங்களைப் போல தனித்துவமான கதைக்களம் இந்த திரைப்படத்திலும் உள்ளது. மாரி செல்வராஜை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

வாழை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  கிராமத்தில் உள்ள அத்தனை மக்களையும் எப்படி மாரி செல்வராஜ் நடிக்க வைத்தார் என்பதை நினைத்து பொறாமையாக இருக்கிறது. இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்” இவ்வாறு இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.