போலந்தில் #PMModi நினைவாக தேநீர் கடை நடத்தும் இந்தியர்!

குஜராத்தின் ராஜ்கோட்டை பூர்விகமாகக் கொண்ட சேத்தன் நந்தானி என்பவர் பிரதமர் நரேந்திர மோடியின் நினைவாக போலந்து நாட்டில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக. 21)…

குஜராத்தின் ராஜ்கோட்டை பூர்விகமாகக் கொண்ட சேத்தன் நந்தானி என்பவர் பிரதமர் நரேந்திர மோடியின் நினைவாக போலந்து நாட்டில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக. 21) மற்றும் நாளை மறுநாள்(ஆக. 22) அரசு முறை பயணமாக போலந்து செல்கிறார். அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். போலந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பிரதமரின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான காணொலிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டை பூர்விகமாகக் கொண்ட சேத்தன் நந்தானி என்பவர் பிரதமர் நரேந்திர மோடியின் நினைவாக போலந்து நாட்டில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். போலந்து தலைநகர் வார்ஸா நகரில் ’சாய்வாலா – தி காஸிப் சென்டர்’ என்ற பெயரில் தேநீரகத்தை நடத்தி வருகிறார் சேத்தன் நந்தானி.

இதுகுறித்து சேத்தன் நந்தானி கூறியதாவது, “நான் கடந்த 14 வருடங்களாக போலந்து நாட்டில் வசித்து வருகிறேன். இந்த உணவகத்துக்கு ‘சாய்வாலா’ எனப் பெயரிட முக்கிய காரணம் பிரதமர் மோடி தான். போலந்தில் இதுபோன்ற ஒரு உணவகத்தை நாங்கள் தான் முதன்முதலில் ஆரம்பித்தோம். இந்த உணவகம் கடந்த 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு விற்கப்படும் பானி பூரியை போலந்து நாட்டினர் ருசித்து சாப்பிட்டுகின்றார்.”

இவ்வாறு சேத்தன் நந்தானி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.