ஒரு நாட்டில் எப்படி இரண்டு சட்டம் இயங்க முடியும்? – ம.பி.யில் பிரதமர் மோடி கேள்வி!

ஒரு நாட்டில் எப்படி இரண்டு சட்டம் இயங்க முடியும். அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

ஒரு நாட்டில் எப்படி இரண்டு சட்டம் இயங்க முடியும். அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தலைமை வகித்தனர்.

இதனைத் தொடர்ந்து பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது..

“இன்று எதிர்கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேசுகின்றனர். ஒரு நாட்டில் எப்படி இரண்டு சட்டம் இயங்க முடியும். அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சொல்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இதனை எதிர்க்கிறார்கள்.

யாரெல்லாம் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்க்கிறார்களோ அவர்கள் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்குவோம். இந்தியா சுதந்திரமடைந்த 100ம் ஆண்டில் அதனை கொண்டாடுவோம்.

நாடு வல்லரசாக வேண்டும் எனில் நாட்டிலுள்ள கிராமங்கள் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் கிராமங்களை வளர்ச்சியடைவதற்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி என்பது இந்தியாவில் மிக முக்கியமான ஒன்று. அதனை குறைத்து மதிப்பிட முடியாது.

எதிர்க்கட்சிகள் ஊழல் குறித்தும் முறைகேடுகளுக்கு எதிராக உத்திரவாதம் தர முடியுமா,..? ஆனால் நான் தருகிறேன். எனது கட்சியில் யாரேனும் ஊழல் செய்தால் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். ஊழல் ஈடுபட்டதனால்தான் எதிர்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகவே அவர்கள் தற்போது ஓரணியில் இணைந்துள்ளார்கள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.