ஓசூர் பகுதியில் காலை 9 மணியை கடந்தும் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்காளாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேக்கநிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு எப்போதும் அதிகமாகவே காணப்படும். தற்போது ஓசூர் பகுதியில் தொடர்ச்சியாக காணப்பட்டு வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓசூர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் , டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் காணப்படும். அவ்வப்போது கடுமையான பனிப்பொழிவும் தென்படும். அந்த வகையில் ஓசூர் மற்றும்அதன் சுற்றுப்புற பகுதிகளில் பனிப்பொழிவு என்பது சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்த பனிப்பொழிவு ஜனவரி மாதமான தற்போதும் தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை 9 மணியை கடந்தும் ஓசூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.அதிலும் குறிப்பாக வெள்ளை போர்வை போர்த்தியது போல கடுமையான பனிப்பொழிவு சாலை முழுவதும் இரவு நேரத்தை போலவே காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர்.
அதேபோல காலை நேரத்தில் நடை பயிற்சிக்கு சென்ற பொதுமக்கள்,என பல்வேறு தரப்பினரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டனர். பொங்கல் தொடர் விடுமுறையை தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என கடும் குளிரால் பாதிப்படைந்தனர. மேலும் பனியின் தாக்கம் குறைந்த பிறகும், குளிர்ந்த ஈரக்காற்று வீசி வருவதால், இந்த குளிரை சமாளிக்கும் வகையில் ஸ்வெட்டர், குல்லா அணிந்து பொதுமக்கள் வெளியே சென்று வருகின்றனர்.