நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதால் நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு கட்டுபாட்டின் கீழ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.வள்ளியூர்,ராதாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்களின் முக்கிய தேவையாக இம்மருத்துவமனை உள்ளது.புற நோயாளிகள் முதல் மகப்பேறு வரையிலான முக்கிய சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இம்மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பணி நேரத்தில் பணிக்கு வருவதில்லை, அப்படியே பணிக்கு வந்தாலும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு தாங்கள் தனியாக நடத்தும் கிளினிக்குகளுக்கு சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே அரசு இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு 24 நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்களை பணி நேரத்தில் மருத்துவமனையிலேயே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
–வேந்தன்








