முக்கியச் செய்திகள் தமிழகம்

குன்னூரில் ராணுவ வீரர்களின் குதிரை சாகச நிகழ்ச்சி

குன்னூரில் ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வெலிங்டன் ராணுவ மைய பகுதிகளில் ராணுவ
வீரர்கள் மட்டுமின்றி உயர் அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு பயிற்சியாக குதிரை சவாரி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், குன்னூரில் மவுன்டன் ஜிம்கானா என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீர்ர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட குதிரை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குதிரைக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, 4 ஜம்பிங், ஷோ ஜம்பிங்க், டிரிக் ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வீரர் வீராங்கணைகள் அசத்தினார்கள்.

துள்ளி சீறி பாய்ந்து போட்டி போட்டுக்கொண்டு முந்திசென்ற குதிரைகள் பார்வையாளர்களை கவர்ந்தது. பின்பு நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில், நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாய்வுதும், குதிரையில் இருந்தே ஈட்டி எறியும் போட்டிகளும் நடத்தப்பட்டது.

 

Advertisement:
SHARE

Related posts

வாக்களிக்க விரும்பவில்லை: அறப்போர் இயக்க ஜெயராமன்

Halley Karthik

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!

Ezhilarasan

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி!

Jeba Arul Robinson