முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கை அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது. அப்போது, அதிபர் கோட்டாபய ராஜபக்சேவிடம், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதனை இலங்கை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவில்லை எனவும், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யவில்லை எனவும், பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

நள்ளிரவு வரை நீடித்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அனைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இலங்கை அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு!

Gayathri Venkatesan

சென்னை மாநகராட்சி பள்ளி சாதனை

Saravana Kumar

அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்: இறையன்பு கோரிக்கை

Halley Karthik