முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-ஜி.கே.மணி வலியுறுத்தல்

95 டி.எம்.சி. தண்ணீா் வீணாக கடலில் கலந்துள்ளது. எனவே ஒகேனக்கல் உபரிநீா்
திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பென்னாகரம் எம்.எல்.ஏ.வும் பாமக மூத்த தலைவருமான ஜிகே.மணி வலியுறுத்தினார்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்
பாதிக்கப்பட்ட இடங்களை பென்னகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி
பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களையும் வெள்ளத்தால் விவசாய
நிலங்களில் நிலக்கடலை செடிகள் மூழ்கிய வயல்களை பார்வையிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி கூறியதாவது:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
ஒகேனக்கல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒகேனக்கல் பகுதி கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய வெள்ளை
சேதத்தை உருவாக்கியுள்ளது.

ஒகேனக்கலில் தொடங்கி மேட்டூர் பூம்புகார் வரை மிகப்பெரிய வெள்ள சேதங்கள்
ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலா தளம். இங்கு
வீடுகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா முடங்கியுள்ளது. சுற்றுலாப்
பயணிகளையும் இங்குள்ள மக்களையும் பாதுகாக்க ஒகேனக்கல் படித்துறையில் இருந்து
நீரேற்று நிலையம் வரை மிகப்பெரிய தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு 20 நாட்களில் 95 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நேற்று மட்டும் 16 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கடலுக்கு
வீணாக செல்லும் உபரி நீரை ஒகேனக்கல் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம்
முழுவதற்கும் ஏரி குளங்களை நிரப்புவதற்கான திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன் வைத்தார்.

இதற்காக 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உபரி நீா் திட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்திலும்
பேசியிருக்கிறேன் . முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்திருக்கிறேன்.

அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். வீணாக கடலில் கலந்த 5 மணி நேர தண்ணீரை மட்டும் தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ள ஏரி குளங்களை நிரப்பி இருந்தால் போதுமானதாக
இருக்கும். ஒகேனக்கல் உபரி நிர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதனால் டெல்டா விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. வெள்ளப்பெருக்கால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் ஜி.கே.மணி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாட்டில் 29-வது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு!

செஸ் ஒலிம்பியாட் – தயாராகும் போக்குவரத்துத்துறை

G SaravanaKumar

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்; உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

G SaravanaKumar