முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இமாச்சல சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் மண்டி மாவட்டத்தின் ஆஹான் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 7 ஆயிரத்து 884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இத்தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்றவுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸ் இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், அவரது தந்தை மற்றும் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். மற்றும் முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமல் உள்ளிட்டோர் வாக்கை பதிவு செய்தனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தலையொட்டி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சினிமாவிற்காக வாழ்க்கையை தொலைத்தவரின் கதை

Arivazhagan Chinnasamy

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து: சவூதி அரேபியா கண்டனம்

Web Editor

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

Halley Karthik