பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் மன்னராட்சி முறை, கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற புரட்சி மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களாட்சி நிறுவப்பட்டது.
இதன் நினைவாக ஆண்டு தோறும் ஜூலை 14-ம் நாள் அந்நாட்டின் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை நினைவுகூறும் வகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரெஞ்சு துணை தூதர், மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்வின் இறுதியில் இந்தியா, பிரான்ஸ் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.









