ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள பாத யாத்திரையின் முக்கிய அம்சங்கள்!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள “இந்திய ஒற்றுமை பாத யாத்திரை” தொடக்க விழா இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.…

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள்
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள “இந்திய ஒற்றுமை பாத யாத்திரை” தொடக்க விழா இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை
ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150
நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு ராகுல் காந்தி எம்பி வருகை தரவுள்ளார்.

விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை ராகுல் காந்தி
எம்.பி பார்வையிடுகிறார். மகாத்மா காந்தி, காமராஜர் மண்டபத்தில் மரியாதை செலுத்தி பாத யாத்திரை தொடக்க விழா நடைபெறுகிறது.

தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்
காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையைத் தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில முதல்வர்கள்
பங்கேற்றவுள்ளனர். முதல் நாளான இன்று 600 மீட்டர் நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.


குமரியில் அவருடன் 300 பேர் நடை பயணத்தில் பங்கேற்கின்றனர். பல மாநிலங்களில் இருந்து 118 பேர் குமரியில் இருந்து டெல்லி வரை அவருடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்திலிருந்து 100 பேர் நடை பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்க விழாவில் கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி
உரையாற்றுகிறார்.

நாளை காலை 6:00 மணிக்கு விவேகானந்தா கல்லூரியில் இருந்து நடை பயணம் தொடங்குகிறது. தமிழகத்தில் 4 நாட்கள் ராகுல் காந்தி நடை பயணம் செய்யவுள்ளார்.
குமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற 25 இடங்களில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நடை பயணத்தில் ராகுல் காந்தி மற்றும் இந்திய தலைவர்கள் ஓய்வெடுக்க 60 கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.