அசாம் பயணம் என் நினைவில் எப்போதும் இருக்கும்; பிஹு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி ட்வீட்

அசாம் பயணம் என் நினைவில்  எப்போதும் இருக்கும் என பிஹு கொண்டாட்டத்தில்  கலந்துகொண்ட பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.  அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிஹூ…

அசாம் பயணம் என் நினைவில்  எப்போதும் இருக்கும் என பிஹு கொண்டாட்டத்தில்  கலந்துகொண்ட பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். 

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிஹூ புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றார். கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஹு நடனக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கரகோஷம் எழுப்பியும், மேள தாளங்களை இசைத்தும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதே மைதானத்தில் நேற்று பிஹூ கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு 2 ஆயிரத்து 548 இசைக்கலைஞர்கள் டிரம்ஸ் இசைத்தும், 11 ஆயிரத்து 304 நடன கலைஞர்கள் நடனமாடியும் உலக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இன்றைய விழாவின் போது கின்னஸ் சாதனை படைக்கப்பட்டதற்கான சான்றிதழ் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சருசஜாய் மைதானத்தில் பிரமாண்ட லேசர் ஷோ கண்கவரும் வகையில் நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி, அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உள்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

https://twitter.com/narendramodi/status/1647076360169422849?s=20

இந்நிலையில், பிரதமர் மோடி இநத நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ’நேற்றைய அசாம் பயணம் என் நினைவில் எப்போதும் இருக்கும். பிரமாண்ட பிஹு கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.