2015க்குப் பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் மழை, வெள்ளம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்…

சென்னையில் மழை, வெள்ளம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  சென்னை பெருவெள்ளம் குறித்து பேசிய தலைமை நீதிபதி கடந்த 2015ஆம் ஆண்டு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

2015ல் மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்ததுபோன்ற ஒரு சூழ்நிலையை தற்போது சந்தித்து கொண்டிருக்கிறது என சாடினார். ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகும் என நம்புவதாகவும், இல்லை என்றால் தன்னிச்சையாக உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடரும் என்றும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.