ஹீரோக்களின் ஃபேவரைட்”பிரசாந்த் நீல்” -சலார் BTS வீடியோ இணையத்தில் வைரல்!

இயக்குனர் பிரசாந்த் நிலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சலார் பட்டக்குழுவினர் அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டது. கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.…

இயக்குனர் பிரசாந்த் நிலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சலார் பட்டக்குழுவினர் அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டது.

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ்  வில்லனாக நடிக்கும் சலாம் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படம்  தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது.  வருகிற செப்டம்பர் 28ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.

https://twitter.com/hombalefilms/status/1665230457766809600?s=20

ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது.  இந்த வீடியோவில் ‘சலார்’ படத்திற்காக பிரசாந்த் நீல் கடுமையாக உழைத்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.