ஹெல்மெட் கட்டாயம் அமலுக்கு வந்தது

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு…

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபரின் மீதும் வழக்குப் பதிவு செய்தும் வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் இன்று முதல் சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க, சென்னை மாநகராட்சி முழுவதும் போலீசார் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபடவுள்ளனர். காவல்துறையின் இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.