புனேவில் #Helicopter விழுந்து நொறுங்கியது – விபத்தில் 4 பேர் காயம்!

புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் 4பேர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம் அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த…

Helicopter crash in Pune - 4 injured!

புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் 4பேர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம் அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானம் யாருடையது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விமானத்தில் விமானி உட்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். Paud அருகே Ghotavade என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் அருகே செல்ல வேண்டாம் என விமானி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.