முக்கியச் செய்திகள்

கேரளத்தில் கனமழை – 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

கேரள மாநிலத்தில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. முதலில் லேசான அளவு மழை பெய்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 49 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 757 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெற இருந்த தேர்வை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடனுமம், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி துவங்க வலியுறுத்தி போராட்டம்- அண்ணாமலை

G SaravanaKumar

தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்ய வேண்டும் – அமைச்சர்

EZHILARASAN D

அமமுகவின் 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Gayathri Venkatesan