கனமழை எதிரொலி – டெல்லியில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

டெல்லியில் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே நேற்றும், இன்றும் கனமழை பெய்து வருவதால் நகரத்தின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகள் மூழ்கி பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் கனமழை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமளியினால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் Flightradar தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மழையால் 18 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.