11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது – உங்கள் மாவட்டம் பட்டியலில் உள்ளதா?

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேபோல், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனை தொடர்ந்து கனமழையின் காரணமாக சாலைகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். இடியுடன் கூடிய மழையின்போது திறந்தவெளியில் இருப்பதையும், மின்கம்பங்கள் மற்றும் மின்சார கருவிகளை தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.